உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 12, 2015

உலக சிக்கன நாள் விழா: மாவட்ட அளவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்த ஏற்பாடு

பள்ளி கல்வித்துறை மற்றும் சிறுசேமிப்புத்துறை சார்பில் மாணவ, மாணவிகளிடையே சேமிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் உலக சிக்கன நாள் விழா கடைபிடிக்கப்பட்டு வருவதால், அன்றைய நாளில் சிக்கனம் மற்றும் சேமிப்பினை வலியுறுத்தி பல்வேறு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி இன்று கூறுகையில்,

உலக சிக்கனநாள் விழா ஒவ்வொரு ஆண்டும் அக்.30-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய நாளில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே சிக்கனம் மற்றும் சேமிப்பு பண்புகளை வளர்க்கும் வகையில் கட்டுரைப்போட்டி, நாடகம், நடனம், பேச்சு போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வெற்றி பெறும் 3 பேருக்கு உலக சிக்கன நாள் விழா அன்று ஆட்சியரால் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் ஆகியவை சிறுசேமிப்புத்துறை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் நிகழாண்டிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க செய்வதற்கு தலைமையாசிரியர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள்ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போட்டி, வருகிற அக். முதல் வார இறுதியில்கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பெறும் மாணவ, மாணவிகள் குழுவினர் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க அழைத்துச் செல்லப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment