ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள் தொடர்பாக தகவல் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆட்சியர் க.நந்தகுமார் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
புரட்சித்தலைவர் எம்.ஜிஆர்.சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் கலவை சாதத்துடன், சத்துணவு மற்றும் சிறப்பு உணவான தினம் ஒரு முட்டை தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி சத்துணவு மையங்களில் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்குவது தொடர்பாக பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிவித்திட அரசினால் கட்டணம் இல்லா தொலைபேசி இணைப்பு மாவட்ட அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்கள் தொடர்பாக பொதுமக்கள் தகவல் எதுவும் தெரிவிக்க வேண்டியிருந்தால் 18004254187 என்ற கட்டணம் இல்லா தொலைபேசியில் தகவல் தெரிவிக்கும் நபர் பெயர் மற்றும் முகவரி, பள்ளி சத்துணவு மையத்தின் பெயர், தொடர்பு கொண்டதற்கான காரணம், கோரிக்கை விவரம் ஆகியவற்றுடன் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment