தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி 11–ந்தேதி தொடக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 8, 2016

தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி 11–ந்தேதி தொடக்கம்

சென்னை தீவுத்திடலில் ஆண்டு தோறும் சுற்றுலாத்துறை சார்பில் தொழில் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டுக்கான பொருட்காட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.மத்திய மாநில அரசுகளின் சாதனை விளக்க அரங்குகள், ராட்சத ராட்டினங்கள் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் அமைக்கப்பட்டு வந்தன.பொருட்காட்சியை இன்று (7–ந்தேதி) திறப்பதாக முதலில் தேதி முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் பொருட்காட்சி பணிகள் முழுமையாக முடிவடையாததால் திட்டமிட்டப்படி பொருட்காட்சி இன்று தொடங்கப்படவில்லை. அரங்குகள் அமைக்கும் பணி இன்னும் 2 நாட்களுக்கு பிறகு தான் முடிவடையும் என தெரிகிறது.இதனால் வருகிற 11–ந்தேதி பொருட்காட்சி தொடங்கப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இந்த பொருட்காட்சி மார்ச் மாத இறுதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பொருட்காட்சியையொட்டி மாநகர சிறப்பு பஸ்களும் விடப்பட உள்ளது.

No comments:

Post a Comment