ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 9, 2016

ரெயில் கட்டணம் உயர்கிறது: ரூ.12 ஆயிரம் கோடி திரட்ட முடிவு

ரெயில்வே மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மத்திய நிதி அமைச்சகம் ஆண்டு தோறும் கணிசமான தொகையை ரெயில்வே அமைச்சகத்துக்கு வழங்கி வருகிறது.அந்த வகையில் 2015–16ம் நிதியாண்டுக்கு ரெயில்வே திட்ட செலவுகளுக்காக மத்திய நிதி அமைச்சகம் ரூ.40 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது.இந்த நிலையில் நிதி அமைச்சகத்தின் திட்ட செலவு ஒதுக்கீடுகள் திருத்தம் செய்யப்பட்ட போது, ரெயில்வே திட்ட செலவுக்கு ஒதுக்கீடு செய்திருந்த தொகை ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.28 ஆயிரம் கோடியாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக நடப்பாண்டில் ரெயில்வே திட்ட செலவுகளில் ரூ.12 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இந்த ரூ.12 ஆயிரம் கோடி கிடைக்காவிட்டால் தற்போது நடைபெற்று வரும் ரெயில்வே திட்ட பணிகளை தொடர்ந்து செய்ய இயலாது. புதிய திட்ட அறிவிப்புகளையும் செயல்படுத்த முடியாது.ரெயில்வே துறையில் உள்ள இந்த நெருக்கடிகளை மத்திய நிதி அமைச்சகத்திடம் விளக்கமாக கூறிய ரெயில்வே அமைச்சகம் ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்க கோரியது. அதை ஏற்க மறுத்த மத்திய நிதி அமைச்சகம், நீங்களே நிதி திரட்டி கொள்ளுங்கள் என்று கூறி விட்டது.இதைத் தொடர்ந்து ரெயில்வே அமைச்சகம் ரூ.12 ஆயிரம் கோடியை திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் தட்கல் முன் பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டது.அடுத்தக் கட்டமாக பயணிகள் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அது போல சரக்கு கட்டணங்களையும் உயர்த்த ஆலோசனை நடந்து வருகிறது.ரெயில்வே அமைச்சகத்துக்கு பயணிகள் கட்டணம் மூலம் 25 சதவீதம், சரக்குகள் கட்டணம் மூலம் 65 சதவீதம் வருவாய் வருகிறது. இந்த இரு கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி பற்றாக்குறையை சமாளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment