தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒரு ரூபாய் நோட்டுகள் வெளி யிடப்படாத நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் 16 கோடி ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட் டுள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்டிஐ) கீழ் இது தெரியவந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் மனோரஞ்சன் ராய் ஆகிய இருவரும் தனித்தனியாக ஆர்டிஐ சட்டத்தின் கீழ் மத்திய அரசுக்கு மனு செய்திருந்தனர். அதில், கடந்த 20 ஆண்டுகளில் எத்தனை ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன என்ற விவரத்தை இருவரும் கேட்டிருந்தனர்.
இதற்கு ரூபாய் நோட்டுகள் அச்சகத்தின் துணை மேலாளரும், மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஜி.கிருஷ்ணா மோகன் அளித்த பதில் விவரம்:
கடந்த 1994-95 நிதியாண்டில் 4 கோடி ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. அதன் பிறகு 1995-96 முதல் 2013-14 நிதியாண்டு வரை ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படவில்லை.
எனினும், 2014-15-ல் 50 லட்சமும் நடப்பு நிதியாண்டில் 15.5 கோடியும் ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ததில், ஒரு ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்கான செலவு அதன் மதிப்பைவிட அதிக மாக இருந்ததால் 20 ஆண்டுகளாக அதை வெளியிடுவது நிறுத்தப் பட்டது தெரியவந்துள்ளது. அதாவது 1994-95-ல் ரூ.1 நோட் டுக்கு ரூ.1.48 செலவானதாக கோப்புகளில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒரு ரூபாய் நோட்டு இணையதளங்கள் மூலம் ரூ.50-க்கு வெளிப்படையாக விற்கப்படுகிறது. இதைத் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment