மணிப்பூரில் நிலநடுக்கத்தால் கடும் சேதம்: 7 நாட்களுக்கு பள்ளிகளை மூட அரசு முடிவு
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பத்தால் கடுமையாக குலுங்கின. மணிப்பூர் மாநிலத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியிருந்தது.
இதேபோல் அசாம், அருணாசல பிரதேசம், மேகாலயா, நாகலாந்து, மிசோரம், திரிபுரா ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்குவங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் மற்றும் மியான்மர், வங்கதேசம், பூடான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
மணிப்பூரில் இந்த பூகம்பம் காரணமாக ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. சில கட்டிடங்கள் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகி விட்டன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தேசிய பேரிடர் மீட்புப்படையின் இரண்டு குழுக்கள் மணிப்பூரில் முகாமிட்டு உள்ளூர் மீட்புக்குழுக்களுடன் இணைந்து மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
பூகம்ப பாதிப்பில் இருந்து மக்கள் மீண்டு வருவதற்காகவும், மேலும் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்கவும், அடுத்த 7 நாட்களுக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்திற்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு செய்யும் என மத்திய இணை மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment