ஏ.டி.எம்., கார்டு எண்மூலம் பணமோசடி:உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, January 11, 2016

ஏ.டி.எம்., கார்டு எண்மூலம் பணமோசடி:உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை

ஏ.டி.எ ஏ.டி.எம்., கார்டு எண்மூலம் பணமோசடி:உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை

ஏ.டி.எம் ., கார்டு எண்ணை கேட்டு மோசடி செய்யும் கும்ப லிடம் பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.திருவாடானையில் கடந்த சில நாட்களாக குறிப்பிட்ட நபர்களை அலைபேசியில் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், உங்கள் ஏ.டி.எம்., கார்டு காலாவதி ஆகி விட்டது. புது கார்டு வேண்டும் என்றால் பழைய கார்டில் உள்ள எண்ணை மட்டும் கூறுங்கள் என கேட்கின்றனர். இதை நம்பி சிலர் குறிப்பாக பெண்கள் கார்டில் உள்ள எண்ணை கூறிவிடுகின்றனர். இதை வைத்து போலி ஏ.டி.எம்.,கார்டு தயார் செய்யும் மர்மநபர்கள் அவர்களது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதையும் எடுத்துவிடு கின்றனர். புத்தாண்டின் புதுவித மோசடியால் அப்பகுதிமக்கள் பலர் பணத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர்.

பண்ணவயல் விஜய் கூறுகையில், "" சில நாட்களுக்கு முன்பு எனது அலைபேசியில் தொடர்புகொண்ட நபர், மும்பையிலிருந்து பேசுவ தாகவும், உங்கள் ஏ.டி.எம்., கார்டு 2015ம் ஆண்டோடு காலாவதியாகி விட்டது. புதுப்பிக்க வேண்டி யிருப்பதால் கார்டில் உள்ள எண்ணை மட்டும் கூறுங்கள். ரகசிய எண்ணை கூறவேண்டாம் என்றார். ஹிந்தி கலந்த தமிழில் பேசியதால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசில் புகார் செய்வதாக மிரட்டி யதை தொடர்ந்து அழைப்பை துண்டித்துவிட்டார்,'' என்றார்.

புக்குளம் ராஜன் கூறியதாவது, ""எனது சித்தப்பா கிருஷ்ணன் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். நாள்களுக்கு முன்பு அவரை அலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஹிந்தியில் பேசியுள்ளார். புரியாததால் அருகிலிருந்தவரிடம் அலைபேசியை கொடுத்துள்ளார். அவர் சித்தப்பாவின் ஏ.டி.எம்., கார்டு எண்ணை கூறியுள்ளார். நேற்று பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்றபோது அவரது கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்துள்ளோம்,'' என்றார்.

போலீசார் கூறுகையில்,'' மோசடி நபர்களை அடையாளம் காண்பது சிரமம் மக்கள் தான் உஷாராக இருக்கவேண்டும்,'' என்றனர். ஸ்டேட்பாங்க் அலுவலர்கள் கூறுகையில்,""பல ஆண்டுகளாக பண பரிமாற்றம் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஏ.டி.எம்., கார்டு காலாவதியாக வாய்ப்புண்டு. அதையும் புதுப்பித்து கொள்ளலாம். மற்றபடி கார்டு காலாவதியாக வாய்ப்பில்லை,'' என்றனர்.

No comments:

Post a Comment