மாணவர்களுக்கு இளநிலை தேர்வு எழுத அனுமதி மறுப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 1, 2016

மாணவர்களுக்கு இளநிலை தேர்வு எழுத அனுமதி மறுப்பு

தமிழகத்தில் தட்டெழுத்து புகுமுக இளநிலை தேர்ச்சி பெற்ற மாணவர்களை, இளநிலை தேர்விற்கு அனுமதி மறுப்பதால், பெற்ற பயிற்சி மறந்துபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏழாவது படிக்கும் மாணவர்கள் தட்டெழுத்து பயிற்சி பெற்று, ஆகஸ்ட்டில் நடக்கும் புகுமுக இளநிலை தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். இளநிலை தட்டெழுத்து தேர்வில் பங்கேற்க கல்வி தகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற விதியால், பிப்ரவரியில் நடக்கும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்கபடுவதில்லை. 8ம் வகுப்பு படித்து முடித்து தேர்ச்சி பெற்றபிறகே, இளநிலை தட்டெழுத்து தேர்விற்கு அனுமதிக்கபடுகின்றனர்.

இதனால் 20 மாதம் வரை காத்திருப்பதால் பெற்ற தட்டழுத்து பயிற்சி மறந்து போகும் சூழலுக்கு ஆளாகின்றனர். மாணவர்களும், பெற்றோர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். புகுமுக இளநிலை தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும், தொடர்ந்து இளநிலை தேர்வில் பங்கேற்க வசதியாக அடிப்படை கல்விதகுதி 8ம் வகுப்பு தேர்ச்சி என்பதிலிருந்து விலக்கு அளித்து, பிப்ரவரியில் நடக்கும் தேர்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். தட்டெழுத்து கணினி பள்ளிகள் சங்க மாநில செயலர் சோம.சங்கர், அரசு தனியார் பணிகக்கு அடிப்படையே தட்டெழுத்து பயிற்சி தான். இதை உணர்ந்து பள்ளி பருவத்தில் மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர். மாணவர்கள் தொடர்ந்து தட்டöழுத்து தேர்வில் பங்கேற்குமாறு அரசு விதிகளை மாற்றியமைக்க வேண்டும்,என்றார்.

No comments:

Post a Comment