சேலத்தில் பானை மீது நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 9, 2016

சேலத்தில் பானை மீது நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவிகள்

சேலம் குளூனி மெட்ரிக் குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 55–வது ஆண்டு விழாவை முன்னிட்டும், இந்தியர்களின் கலாச்சாரத்தினையும் தமிழ்நாட்டின் பண்பாட்டினை பறைசாற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டும் இன்று பள்ளி வளாகத்தில் பானையின் மீது நின்று இறைவணக்க பாடல், பாரதியாரின் பாரத சமுதாயம் வாழ்கவே பாடல் ஆகிய பாடல்களுக்கு 6.4 நிமிடங்கள் 483 மாணவிகள் குழுவினராக இணைந்து பரதநாட்டியம் நடனம் ஆடி கின்னஸ் சாதனை படைத்தனர்.இந்த கின்னஸ் சாதனைக்காக கடந்த 3 மாதங்களாக மாணவிகள் அனைவரும் நடன ஆசிரியை லதா மாணிக்கம் மேற்பார்வையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர்.இந்த கின்னஸ் சாதனை படைத்த அனைத்து மாணவிகளும் 2–ம் வகுப்பு முதல் 11–ம் வகுப்பு வரை படித்து வரும் மாணவிகள் ஆவர்.இந்த கின்னஸ் சாதனையை லண்டன் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் (யு.கே) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இந்திய அட்ஜுடிகேட்டர் கார்த்திகேயன் ஜவஹர் மற்றும் சிங்கப்பூர் ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் இந்திய ஆய்வு அதிகாரி அட்ஜுடிகேட்டர் டாக்டர் செந்தில்குமார், அட்ஜுடி கேட்டர் பேராசிரியர் இர்பான் அகமது, மும்பை இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மேலாளர் ஜெகநாதன், தமிழன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் ராஜ்கிருஷ்ணா ஆகியோர் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர்.483 மாணவிகளால் படைக்கப்பட்ட உலகிலேயே மிக அதிகமான நபர்கள் ஒரே சமயத்தில் பானை மீது நடனம் ஆடிய நிகழ்வு எனும் உலக கின்னஸ் சாதனையாக அங்கீகரித்தார்கள்.இதுபற்றி மும்பை இந்தியன் ரெக்கார்ட்ஸ் அகாடமியின் மேலாளர் ஜெகநாதன் கூறியதாவது:–இந்த பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 483 மாணவிகள் பானையின் மீது நடனமாடியது உலகிலேயே இதுதான் முதல் முறையாகும். எந்த சாதனையாக இருந்தாலும் 4 நிமிடங்களாகத்தான் இருக்கும். ஆனால் மாணவிகள் பானை மீது நடனமாடிய சாதனை 6.4 நிமிடங்கள் உலக சாதனையாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.கின்னஸ் சாதனையில் கலந்து கொண்ட மாணவிகள் வைஷ்ணவி, அட்ஷயா கூறுகையில் உலக சாதனை படைப்பதற்காக தொடர்ந்து 3 மாதங்களாக பயிற்சி எடுத்தோம். இன்று நடந்த இந்த நிகழ்ச்சியில் 483 மாணவிகள் நடனமாடி உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற அனைத்து விதிமுறைகளுக்கும் உட்பட்டு, உலக சாதனை நிகழ்த்தியிருக்கிறோம். இது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நடன ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறினர்.

No comments:

Post a Comment