போனஸ் தகுதியை உயர்த்த கோரிக்கை! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 2, 2016

போனஸ் தகுதியை உயர்த்த கோரிக்கை!

அரசு ஊழியர் போனசுக்கான அடிப்படை ஊதிய தகுதியை உயர்த்த வேண்டும்' என,  ஆசிரியர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின்
பொதுச் செயலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கை:மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த போனஸ், 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியத் தகுதியும், 21 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.எனவே, தமிழக அரசும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான போனசை உயர்த்த வேண்டும். சி மற்றும் டி பிரிவினருக்கான போனஸ், 2,500 ரூபாய்; ஏ மற்றும் பி பிரிவினருக்கான மிகை ஊதியம், 1,000 ரூபாயை, 7,000 ரூபாயாக, தமிழக அரசு உயர்த்த வேண்டும். போனசுக்கான அடிப்படை ஊதியத் தகுதியையும், 21 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment