விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடப்பதாக புகார் எழுந்துள்ளது.பள்ளிக் கல்வி விதிமுறைகள், கட்டாய கல்வி உரிமை சட்டம் மற்றும் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே, பள்ளிகள் செயல்பட முடியும்.
ஆனால், தனியார் பள்ளிகள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப, விதிமுறைகளை மீறி செயல்படுகின்றன.அரசின் உத்தரவுப்படி, பள்ளிகளில் பாடங்கள் மற்றும் வகுப்புகளின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி, மாணவர் எண்ணிக்கை போன்றவற்றுக்கு முறையான அனுமதி பெற வேண்டும்.ஆனால், பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகள், அங்கீகார சான்றிதழில் கூறப்பட்ட விதிமுறைகளை மீறி, எல்.கே.ஜி., முதல், 9ம் வகுப்பு வரையில், மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது.தற்போது புதிய கல்வி ஆண்டு நெருங்குவதால், எல்.கே.ஜி., வகுப்புக்கு, 'ஆன்லைன்' உள்ளிட்ட இரு வழிகளில், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில், நன்கொடைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்புகள் துவங்குகின்றனர்; அதில், கூடுதலான மாணவர்கள்சேர்க்கப்படுகின்றனர்.
இது குறித்து, பெற்றோர்கள் கூறியதாவது:எந்த பள்ளியிலும், மாணவர் சேர்க்கைக்கு முறையான அறிவிப்பு இல்லை. இடைத்தரகர்கள், பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் மூலம் சேர்க்கை நடவடிக்கைகள் தடையின்றி துவங்கியுள்ளன.இதில் பல பள்ளிகள், தேவையான உள்கட்டமைப்பு வசதிகள்இல்லாமலேயே, கூடுதல் வகுப்புகள் துவங்கவும், கூடுதல் மாணவர்களை சேர்க்கவும் முயற்சிக்கின்றன. இதை தடுக்க, சட்ட நடவடிக்கை எடுக்கவோ, 'நோட்டீஸ்' அனுப்பவோ யாரும் முயற்சி செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment