காபியில் உள்ள காபின் என்ற வேதி மூலப் பொருள் பார்கின்சன் நோயை ( மூளை செல்களை பாதிக்கும் நோய்) அண்ட விடாது என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
காபி குடிப்பதால் உடலுக்கு கேடு ஏற்படாது. நன்மை தான் அதிகம் என ஆராய்ச்சியாளர்கள் ஆதாரங்களுடன் கூறுகின்றனர்.
உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பதற்காக புத்தாண்டு கொள்கை பட்டியலில் பலர் காபி குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு முக்கிய இடம் கொடுத்துள்ளனர். ஆனால் அது தவறானது என ஆராய்ச்சி ஆதாரங்கள் கூறுகின்றன. உண்மையில் காபி குடிப்பது உடல்நலத்திற்கு கேடானது இல்லையாம்.
காபி குடிப்பவர்களுக்கு கல்லீரல் புற்றுநோய், மாரடைப்பு போன்ற எதிர்பாராத மரணங்கள், டைப் 2 டயபெட்டிக்ஸ் போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு மிக குறைவு என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உணவு கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காபியை கைவிட வேண்டும் பலர் நினைப்பது முட்டாள்தனமானது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
காபியில், நமது உடலில் செல்கள் சிதைவடைவதை தடுக்கும் பயோகெமிக்கல்கள் உள்ளனவாம். மேலும் இன்சுலின், குளுக்கோஸ் தொடர்பான செல்கள் ஆற்றலுடன் செயல்பட துணை நிற்கின்றனவாம். காபியில் உள்ள காபின் என்ற மூலப் பொருள் நமது உடலில் போதிய அளவு இன்சுலினை சுரக்கச் செய்வதுடன்,
இன்சுலின் முறையாக உடலில் செயல்படாத போது அதிகமாகும் சர்க்கரையை ஆற்றலாகவும் மாற்றி விடுமாம். ஒரு கப் காபியில் உள்ள காபின் அளவு , பார்கின்சன் நோயை அண்ட விடாமல் செய்து விடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment