புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 3, 2016

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

ஒருவேளை புத்தாண்டு அன்று பணிக்கு வர ஊழியர்கள் தவறும் பட்சத்தில் அன்றிலிருந்து அவர்களுக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் தள்ளிப்போகலாம். முன்னதாக, துணை ராணுவப் படையும் தங்களது அதிகாரிகளிடம், புத்தாண்டு தினத்தில்விடுப்பு எடுத்தால், மீண்டும் பணியில் சேரும் நாளில் இருந்தே ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்று தெரிவித்திருந்தது.

No comments:

Post a Comment