மாணவர் விவரம் அவகாசம் நீட்டிப்பு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 2, 2016

மாணவர் விவரம் அவகாசம் நீட்டிப்பு.

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரம் பதிவேற்றம் செய்ய, 5 வரை, பள்ளிகளுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெற்றது. இவ்விவரங்களை, முதல்கட்டமாக ஆப்லைன்னில் தயாரித்து வைக்க ஏதுவாக, பள்ளிகளுக்கு யூஸர் ஐடி, பாஸ்வேர்டு தரப்பட்டன. தற்போது, 5 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள், பிழை இல்லாமல், பெயர் பட்டியல் தயார் செய்ய, தலைமை ஆசிரியர்கள் முழு கவனம் செலுத்த வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.

தனித்தேர்வருக்கும் அவகாசம் மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள்,டிச., 11 முதல், 29 வரை தேர்வுக்கு, விண்ணப்பிக்க, அவகாசம் தரப்பட்டது. அவர்களும், ஜன., 5 வரை,அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையத்தை அணுகி, ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என,அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment