போகி பண்டிகையன்று, தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள், ஆசிரியர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடந்து வருகின்றன. போகி பண்டிகை தினமான வரும், 14ம் தேதியன்றும், தேர்வுகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள், பெற்றோர் அப்செட் ஆகியுள்ளனர்.
ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது: பொதுவாக, ஆண்டுதோறும் போகி பண்டிகையன்று, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். நடப்பாண்டு, போகி பண்டிகையன்று, பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஆங்கிலம் இரண்டாம் தாள், பிற வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி என, தேர்வு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
பெற்றோர் சிலர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். போகியன்று தேர்வு நடத்தப்படுவதால், வெளியூர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை உற்சாகம் குறைந்துவிட்டது என்றனர்.
No comments:
Post a Comment