அஞ்சல் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 8, 2016

அஞ்சல் நிலையங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு வசதி

அஞ்சல் நிலையங்களிலுள்ள ரயில் டிக்கெட் முன்பதிவு வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று சென்னை நகர மண்டல அஞ்சல் அதிகாரி மெர்வின் அலெக்சாண்டர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
ரயில்வே டிக்கெட்டுகளை அஞ்சல் நிலையங்களில் முன்பதிவு செய்வதற்கு ஏதுவாக அஞ்சல் துறை மற்றும் ரயில்வே அமைச்சகம் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, சென்னை மண்டலத்துக்கு உட்பட்ட ஸ்ரீபெரும்புதூர் அஞ்சல் நிலையத்தில் அந்த வசதி கடந்த 2008-ம் ஆண்டு செயல்படுத்தப் பட்டது.
தற்போது, ஸ்ரீபெரும்புதூர் மட்டுமன்றி, சாஸ்திரி பவன், கல்பாக்கம், செஞ்சி, வில்லியனூர், திருவெட்டிபுரம், செங்கம் ஆகிய சென்னை நகர மண்டல அஞ்சல் நிலையங்களிலும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment