அண்ணாமலை பல்கலை கழக மையங்களில் சேர்க்கை துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, May 1, 2016

அண்ணாமலை பல்கலை கழக மையங்களில் சேர்க்கை துவக்கம்

அண்ணாமலைப் பல்கலையின் தொலைமுறைக் கல்வி இயக்ககத்தின், 2016 - 17ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை அனைத்து மையங்களிலும் துவங்கியுள்ளது.

அனைத்து இளங்கலை மற்றும் பட்டயப்படிப்புக்கான விண்ணப்ப கட்டணம், 100 ரூபாயாகவும், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., மற்றும் எம்.எஸ்.சி., ஐ.டி., கான விண்ணப்ப கட்டணம், 250 ரூபாய், பி.எட்., படிப்புக்கு, 500 ரூபாயும் விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இப்படிப்புகளில் சேரும், எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அவர்களது கல்விக் கட்டணம் முழுவதையும் தமிழக அரசு கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது. மாற்றுத்திறன், பார்வையற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment