ஓணம் பண்டிகை: 14-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 7, 2016

ஓணம் பண்டிகை: 14-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் 14-ம் தேதி சென்னை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் (முழு கூடுதல் பொறுப்பு) அழகுமீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14,09,2016 தேதி புதன்கிழமை சென்னை மாவட்டத்திற்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.

மேற்படி உள்ளூர் விடுமுறைக்கு பதில் 8.10.2016 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணிநாளாக அறிவிக்கப்படுகின்றது.
ஆயினும் உள்ளூர் விடுமுறை நாளான 14.09.2016 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களைக் கொண்டு பொது மக்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு செயல்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment