பிளஸ் 2 காலாண்டு தேர்வு நாளை மறுநாள் துவக்கம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 6, 2016

பிளஸ் 2 காலாண்டு தேர்வு நாளை மறுநாள் துவக்கம்

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது. தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை பின்பற்றும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்கள் இந்த தேர்வுக்கு தயாராகும் வகையில், கடந்த ஆண்டு அரையாண்டு தேர்வானது, பொது வினாத்தாள் மூலம் ஒரே நாளில் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு காலாண்டு தேர்வையும், பொதுவான தேர்வாக நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, நாளை மறுநாள், தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு துவங்கி, செப்., 23ல் முடிவடைகிறது.

No comments:

Post a Comment