திறமையான அர்ப்பணிப்பு உணர் வுடன் கூடிய ஆசிரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும் என்று காந்திகிராம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜஹிதா பேகம் தெரிவித்தார்.
ப்ரீசென்ஸ் மின்னணு இதழ், சன்சத் ரத்னா விருது குழு ஆகியன சார்பில் தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கருத்தரங் கம் சென்னையில் நேற்று நடந்தது. சன்சத் ரத்னா விருது குழு ஆலோ சகர் சூசன் கோஷி வரவேற்றார். மூத்த பத்திரிகையாளர் நூருல்லா, கருத்தரங்கை தொகுத்து வழங் கினார்.
இதில் பள்ளிக் கல்வி தொடர் பான குழு விவாதத்தில் காந்தி கிராம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜஹிதா பேகம் பேசும்போது, “தேசிய கல்விக் கொள்கை மிகவும் முக்கியமானது. இக்கொள்கையில் ஆசிரியர் பயிற்சி குறித்து நிறைய சொல்லப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை வெளிப் படையாகச் சொல்லியுள்ளனர். நல்ல திறமையான அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசி ரியர்கள் இருந்தால் மட்டுமே தரமான கல்வி சாத்தியமாகும்” என்றார்.
தேசிய திறந்த நிலை பள்ளி சென்னை மண்டல இயக்குநர் ரவி பேசும்போது, “தேசிய திறந்த நிலை கல்வித் திட்டம் ஒரு வெற்றிகரமான திட்டமாகும். இதில் படித்தவர்களில் ஆண்டுக்கு 300 பேர் ஐஐடி-யிலும், 4 ஆயிரம் பேர் என்ஐடி-யிலும் சேர்கின்றனர்.
வழக்கமான பள்ளிகளில் படிக் கும் மாணவர்கள் பெறும் சான்றித ழும், தேசிய திறந்த நிலை கல்வித் திட்டத்தில் பெறும் சான்றிதழும் சம மானவைதான் என்று அரசாணை வெளியிடப்பட்டால் இத்திட்டத் துக்கு இன்னும் அமோக வரவேற்பு கிடைக்கும்” என்றார்.
சென்னை டிஸ்லக்ஸியா சங்கத்தின் முன்னாள் தலைவர் லட்சுமி ராதாகிருஷ்ணன் பேசும் போது, “மாணவர்களிடம் தன்னம் பிக்கையை வளர்க்கும் ஆசிரியர் கள்தான் தேவை. தகவல் தெரிவிக் கும் ஆசிரியர்கள் தேவையில்லை” என்றார்.
அதன்பின்னர் நடைபெற்ற உயர் கல்வி தொடர்பான குழு விவாதத் தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஏ.கலா நிதி பேசும்போது, “1965, 1986-ல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையிலும், இப்போ தைய தேசிய கல்விக் கொள்கை யிலும் சமஸ்கிருதம் ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது. தமிழும், சமஸ்கிருத மும் உலகில் பழமையான இரண்டு மொழிகள் ஆகும். அதனால் தேசிய கல்விக் கொள்கையில் சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் தமிழையும் சேர்க்க வேண்டும்” என்றார்.
சென்னை ஐஐடி இணைப் பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் பேசும்போது, “வெளிநாட்டில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களின் கிளைகளை நம் நாட்டில் தொடங் கும்போது, தரமான கல்வியும், அறநெறிப் பண்புகளும் இருத்தல் வேண்டும். தவறான நிர்வாகத்தால் தான் நம்மால் நிறைய சாதனைகளை நிகழ்த்த முடியவில்லை” என்று குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், எஸ்.எஸ்.ஜெயின் கல்வி சங்க செயலாளர் ஹரீஷ் மேத்தா ஆகியோரும் பேசினர். நிறைவில், சன்சத் ரத்னா விருதுக் குழு செயலாளர் பாவனேஷ் தியோரா நன்றி கூறினார். ப்ரீசென்ஸ் மின்னணு இதழின் ஆசிரியர் கே.னிவாசன் இக் கருத்தரங்குக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
No comments:
Post a Comment