கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள்இடம்மாற தடை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 9, 2016

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள்இடம்மாற தடை

கவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள்இடம்மாற தடை
பிற மொழி பள்ளிகளில் பணி மாறுதல் பெற்ற, தமிழ் ஆசிரியர்கள், இடம்மாற தடை விதிக்கப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், கடந்த வாரம் முடிந்தது. இதில், இடஒதுக்கீடு பெற்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு இடம்மாறி வருகின்றனர். ஆசிரியர்கள், புதிய இடங்களுக்கு மாற, சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, பள்ளிக்கல்வி இணை இயக்குனர் , அனுப்பிய சுற்றறிக்கை:

ஒரே பள்ளியில் இருந்து, அதிக ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், அவர்களை உடனே, மொத்தமாக இடம்மாற அனுமதிக்கக் கூடாது. மூன்றில் இரண்டு பங்கு ஆசிரியர்கள், பள்ளியில் இருக்கும் வகையில், தலைமை ஆசிரியர்கள் இந்த முடிவை எடுக்க வேண்டும். தெலுங்கு, மலையாளம், உருது போன்ற பிறமொழி கற்றுத் தரப்படும் பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றிருந்தால், மற்றொரு தமிழ் ஆசிரியர் வரும் வரை, அவரை விடுவிக்கக் கூடாது. அனைத்து பள்ளிகளிலும் மாற்று ஆசிரியர்கள் வந்த பின்பே, ஆசிரியர்கள் இடம்மாற அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment