இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகபடுத்தி உள்ளது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 8, 2016

இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகபடுத்தி உள்ளது.

இணையதள சேவையில் பி.எஸ்.என்.எல். புதிய திட்டம் அறிமுகபடுத்தி உள்ளது. நாளை முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என பி.எஸ்.என்.எல். துணைபொதுமேலாளர் (நிர்வாகம்) எம்.எஸ்.திரிபுரசுந்தரி தெரிவித்து உள்ளார்.

பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை கவரும் வகையில் நாளை (வெள்ளிக்கிழமை) கம்பியில்லா அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள வசதியை சலுகை கட்டணத்தில் ‘எக்ஸ்பீரியன்ஸ் அன்லிமிடெட் பிபி 249’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மாதம் 300 ஜி.பி. வரை பதிவிறக்கம் செய்ய ரூ.249 கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

அதாவது 1 ஜி.பி.க்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டணமே வாடிக்கையாளர்களிடம் பெறப்படுகிறது. இதுகுறித்து கூடுதல் தகவல்களை பெற வாடிக்கையாளர்கள் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் சேவை மையத்தை அணுகலாம். அல்லது இலவச அழைப்பான 1800 345 1500 என்ற எண்ணிலும், www.bsnl.co.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை துணைபொதுமேலாளர் (நிர்வாகம்) எம்.எஸ்.திரிபுரசுந்தரி தெரிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment