பள்ளிகளில், ஆதார் முகாமே இன்னும் முடிவடையாத நிலையில், 'நாளைக்குள் மாணவர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வித் துறை, கெடு விதித்துள்ளது, ஆசிரியர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை, இலவச திட்டங்கள், ஆண்டு இறுதி தேர்வுகள், சான்றிதழ் வழங்குதல் போன்றவற்றுக்கு ஆதார் எண்ணை பயன்படுத்த, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
பள்ளிகளுக்கு...இதற்கு வசதியாக, மாணவர்களின் ஆதார் எண்ணை கணினியில் பதிவு செய்யுமாறு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மின்னணு கல்வி நிர்வாக மேலாண்மை திட்டமான, 'எமிஸ்' திட்டத்திற்கும், ஆதார் எண் பதியப்படுகிறது. 'அனைத்து மாணவர்களின் ஆதார் எண்களையும், நாளைக்குள் பதிவு செய்ய வேண்டும்' என, ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கெடு விதித்துள்ளனர்.
20 லட்சத்துக்கும் மேலான மாணவர்களுக்கு, இன்னும் ஆதார் எண்ணே கிடைக்கவில்லை. இதற்காக, பள்ளிகளிலேயே ஆதார் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஆதார் எண் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தில் ஆள் பற்றாக்குறை உள்ளதால், பல பள்ளிகளில், உரிய நேரத்தில் முகாம்கள் நடத்தப்படவில்லை. பல இடங்களில், முகாம் நடத்துவோர் வராததால், பெற்றோரும், மாணவர்களும், பல மணிநேரம் காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
முரண்பாடு:இது குறித்து ஆசிரியர்கள் கூறுகையில், 'ஆதார் எண் வழங்கும் முகாமை முறையாக நடத்த சம்பந்தப்பட்ட துறைக்கு கெடு விதிக்க வேண்டும். ஆதார் எண் வழங்கிய பின் பதிவு செய்யும்படி, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கெடு விதிக்கலாம். ஆதார் முகாம் நடத்த தாமதமாகும் நிலையில், எண்களை பதிவு செய்ய கெடு விதிப்பது முரண்பாடாக உள்ளது'
No comments:
Post a Comment