ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 5, 2016

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பதவிக்கு தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம், நீதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகரியா, ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் ராகேஷ் மோகன், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகாந்த தாஸ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதேபோல், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் உர்ஜித் படேல், முன்னாள் துணை ஆளுநர் சுபீர் கோகர்ண் ஆகியோரின் பெயர்களும் அப்பதவிக்கு அடிபட்டன. இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக (24ஆவது) உர்ஜித் படேலை (52) மத்திய அரசு நியமித்தது. இதனைத் தொடர்ந்து, உர்ஜித் படேல் இன்று (செப்டம்பர் 5) ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டார். துணை ஆளுநர் ஒருவர், ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவது இது 8-ஆவது முறையாகும்.

No comments:

Post a Comment