மாணவர்களின் நலனுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுபடும் *கல்வியாளர்கள் சங்கமம்* - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 5, 2016

மாணவர்களின் நலனுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுபடும் *கல்வியாளர்கள் சங்கமம்*

மாணவர்களின் நலனுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஒன்றுபடும்

*கல்வியாளர்கள் சங்கமம்*

தங்களது பணியின் மீது ஆர்வமும் கூடுதலாக தங்களது மாணவர்களின் மீது அக்கறையும் கொண்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்தப்பணத்தை செலவுசெய்து, விடுமுறை நாட்களில் கூட தங்களது கற்பித்தலுக்காகவும் மாணவர்களின் கற்றலுக்காகவும் ஏதேனும் ஒரு விசயத்தை சக ஆசிரியர்களுக்கு கொடுக்கவோ பெற்றுக்கொள்ளவும்... இடையில் தங்களது திறன்சார் விசயங்களையும் இன்னும் பட்டைதீட்டிக் கொள்ளமுடியும் என்னும் நம்பிக்கையோடு ஒன்றுபட்டு *நாங்கள் நினைத்தால் எதையும் சாதிப்போம் என நம்பிக்கை உடையவர்களின் தளமாக உள்ள அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாநில அளவில் சங்கமிக்கும் இரண்டாவது தளமாக *கல்வியாளர்கள் சங்கமத்தின்*ஆசிரியர் திருவிழா வரும் *முதல்பருவ விடுமுறையின் கடைசி இரண்டு நாட்களான *அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தினங்களில் *கரூர் சேரன் பொறியியல் கல்லூரியில்* நடைபெற உள்ளது...

இது அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான

*புதிய உத்திகளுக்கான பயிலரங்கு*
*கலைப்பண்பாட்டு விழா*
*விளையாட்டு விழா*
*விருதுகள் வழங்கும் விழா*

இவ்விழாவில் கலந்துகொள்ள

கூடுதல் காவல்துறை இயக்குனர் முனைவர் C.சைலேந்திரபாபு IPS

அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர்
முனைவர் சொ.சுப்பையா

EFI நிறுவனரும் சுற்றுச்சூழல் ஆர்வலருமான
அருண்கிருஷ்ணமூர்த்தி

ரோட்டரி இந்தியாவின் இயக்குநர்
Rtn.C.பாஸ்கர்

ரோட்டரி இந்தியாவின் தேசிய எழுத்தறிவுக்குழு உறுப்பினர்
Rtn.PDG.சாம்பாபு

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி
முனைவர். R.ராஜ்குமார்

SCERT உதவிப்பேராசிரியர் R.ஆசிர்ஜுலியஸ்

புதிய தலைமுறை உதவி ஆசிரியர்
இவள்பாரதி

சிறார் எழுத்தாளர் விழியன்

கனவு ஆசிரியர் அமைப்பின் இயக்குநர் N.தாமரைக் கண்ணன்

கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட DIET முதல்வர்கள் ஆகியோர்

கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

வாருங்கள் *உங்கள் வருகையும் இவ்விழாவை இன்னும் சிறப்புக்குரியதாக்கலாம்....*

கல்வியாளர்கள் சங்கமம் சார்பாக உங்கள் வரவையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்...

வருங்கால சமுதாயம் வளமானதாக மாற்றுவோம்...

250 நபர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும் என்பதால் விரைவில் தங்களது பதிவுகளை  உறுதிசெய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்...

நன்றி...
சிகரம்.சதிஷ்குமார்..

944 229 3459
978 606 0665

No comments:

Post a Comment