பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, September 2, 2016

பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் சட்டசபையில் மசோதா தாக்கல்

அரசுப் பணி நியமனம், பணி வரன்முறைக்கான புதிய விதிமுறைகள் கொண்ட சட்டமசோதாவை நிதி, பணியாளர் மற்றும்நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.

அதன் விவரம் வருமாறு:
அரசுப் பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம் மற்றும் பணி வரன்முறை ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன.தற்போது சட்டமன்றத்தின் சட்டம் ஒன்றினால் அத்தகைய பணிகள் மற்றும் பதவிகளுக்கு பணியமர்த்தப்படும் நபர் களின் நியமனம், பணி வரன்முறையை ஒழுங்குமுறைப்படுத்தும் வகைமுறை களைச் செய்வது என்று அரசு முடிவு செய்திருக்கிறது. அதனுடன் செயல்படும் வகையில் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதிகளின் பகுதி-1, பகுதி-2 ன் வகைமுறைகளை உள்ளடக்கும் வகையில் சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதென அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் அரசால் வகுத்துரைக்கப் பட்டுள்ள சுழற்சி முறையிலான தெரிவுக்கிணங்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லது பதவி யமர்த்தும் அதிகார அமைப்புகளால் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பணிமூப்புக்காக வகை செய்யும் பொருட்டு, ஒரு பணியில் பதவியமர்த்தம் செய்யப்பட்டதற்கான நபர்களின் பணிமூப்புக்கென தனியாக சட்டம் கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.பிரிவு அல்லது இனம் அல்லது தரம் ஒதுக்கீட்டின் விதி மற்றும் சுழற்சிமுறை ஆணைப்படி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அல்லது பிற நியமன முகமைகள் அல்லதுபதவியமர்த்தும் அதிகார அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட பட்டியலில் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வரிசையிடத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட வேண் டும் என்று சட்டமசோதாவில் குறிப் பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment