ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் - TT NEWS - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 4, 2016

ஆசிரிய பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும் - TT NEWS

ஆசிரியர் (ஆசு = தவறு ; இரியர் = திருத்துபவர்) எனப்படுபவர் மற்றவர்களுக்கு பள்ளிக்கூடமொன்றில் கல்வி கற்பிப்பவர். ஒரே ஒருவருக்கு கல்வியளிப்பவர் தனிப்பயிற்சியாளர் என அழைக்கப்படுகிறார். ஆசிரியர்கள் பொதுவாக ஓர் பள்ளிக்கூடத்தில் அல்லது அத்தகைய முறையான கல்வியகத்தில் பணியிலமர்ந்து முறைசார் கல்வி வழங்குவர். பல நாடுகளில் அரசு நிதியளிக்கும் பள்ளிகளில் ஆசிரியப்பணியாற்ற ஓர் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் பயின்று ஆசிரியப் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக ஓர் துறையில் பட்டப்படிப்பு முடித்தப் பின்னர் கல்வியியலில் கல்வியைத் தொடரவேண்டும். முறைசார் கல்வியில் ஆசிரியர்கள் ஓர் முன்னறிவிக்கப்பட்ட சீரான கல்வித்திட்டத்தின்படி பாடங்களை ஓர் கால அட்டவணைப்படி பயிற்றுவிக்கின்றனர். ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை, சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களிலும் கற்பிக்கின்றனர்.

No comments:

Post a Comment