1 முதல் 7-ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!
நவம்பர் முதல் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் பல்வேறு கடுமையான ஊரடங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் சூழலில் தொடர்ந்து, 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாத இறுதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது.
கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்காத வகையில் ஆன்லைன் வழியிலான வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டனர். இதர வகுப்புகளுக்கு மட்டும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது.
தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவியதையடுத்து ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்ச்சி செய்யப்பட்டனர்.
இதர 10, 12ம் வகுப்பு உள்ளிட்ட மாணவர்கள் முந்தைய தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர்.
இதனிடையே, சமீப நாட்களாகத் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மூன்றாம் அலை பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், பள்ளி, கல்லூரிகள் மீண்டும் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, செப்டம்பர் முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆங்காங்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, பள்ளிகள் திறக்கப்பட்ட சூழலில் மாணவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 1ம் முதல் 7ம் வகுப்பு வரையில் பள்ளிகளைத் திறக்க கேரள மாநிலத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பள்ளிகளைத் திறப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் 1 முதல் 7ம் வகுப்பு வரையிலான வகுப்புகள், 10 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள வகுப்புகள் நவம்பர் 15ம் தேதி முதல் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நெருங்கி வருவதால் அம்மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு பள்ளிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள் திறந்தவுடன் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் மாநில அரசு மருத்துவ நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையாக முகக் கவசம் வழங்க வேண்டும் என கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தவரிட்டுள்ளார். மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், கிருமி நாசினி தெளித்தல், முகக் கவசங்களைச் சேமித்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகளை அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment