அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு - குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, September 30, 2021

அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு - குழந்தைகளைக் கொண்டாடும் திருவிழா 2021

மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கான வாய்ப்பு. 

 கதை, பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் தொடக்க நிலை வகுப்புகளுக்கானது. 

 கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் 6-8 வகுப்பு மாணவர்களுக்கானது. 

     ஒரு பள்ளியில் ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டும் கலந்து கொள்ள முடியும். 
    தொடக்க நிலையில் நான்கு குழந்தைகளும், நடுநிலை அளவில் நான்கு குழந்தைகளும் பங்கு பெற முடியும். அக்டோபர் 15 வரை இணைப்பில் உள்ள கூகுல் படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். 

    படிவத்தின் இறுதியில் வாட்சப் குழுவிற்கான link தரப்பட்டுள்ளது. 

    அதன் மூலம் குழுவில் இணையலாம். 

     அக்டோபர் 16 முதல் அக்டோபர் 31 வரையில் மாணவர்களின் படைப்புகளை வீட்டில் இருந்த படியே இணைய வழியில் அனுப்ப வேண்டும். 

     நவம்பர் 1 முதல் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பிரித்து தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் இணையும் கூட்டம் இணையவழியில் நடைபெறும். 

     பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் உண்டு. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று பிரம்மாண்டமாக பரிசு வழங்கும் விழா நடத்தப்பட உள்ளது. 

     ஆசிரிய நண்பர்கள் தங்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் அருகில் இருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment