ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்குவது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு பெயர் மற்றும் கைபேசி எண் அனுப்பிட கோருவது-
தொடர்பான செய்தி
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் தொடக்கப்பள்ளிகள் - 822 நடுநிலைப் பள்ளிகள்-99 உயர்நிலைப் பள்ளிகள்-108 மேல்நிலைப் பள்ளிகள்-98 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகின்றன. ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு ஆங்கில வழியாக பேசுவதற்கு பெற்றோர்களும் மற்றும் மாணவ / மாணவியர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். எனவே மாணவ / மாணவியர்களுக்கு Spoken English ஆங்கில பேச்சு திறமையை வளர்க்க, ஒவ்வொரு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் அவர்களது கைப்பேசி (Whats app) மூலமாக பயிற்சி தொண்டு நிறுவனம் அல்லது volunteers மூலமாக பயிற்சி வழங்கப்படவுள்ளன.
எனவே, ஒவ்வொரு ஆசிரியர்களுக்கு கைப்பேசி (Whats app) மூலமாக பயிற்சி வழங்குவதற்கு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பயிற்சி பெறும் ஆசிரியர் பெயர் மற்றும் அவருடைய கைப்பேசி எண் (Whats app No ) ஆகியவைகளை இக்கடிதத்துடன் இணைத்து மின்னஞ்சல் மூலமாக அனுப்பும் Google sheet படிவம் மூலமாக 29.09.2021 க்குள் காலதாமதத்தை தவிர்த்து உடனே அனுப்பிடக்கோரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment