திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியர் கோ.கௌதமன் அவர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் உதவியுடன் இணைய தளம் வழியாக தங்கள் பள்ளியில் அனைத்து பதிவேடுகளும் பதிவு செய்துள்ளார்கள்.
பள்ளியை விட்டு சென்ற மாணவர்கள் விவரங்கள்,பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் விவரங்கள், ஆசிரியர்கள் விவரங்கள் அனைத்தும் அந்த இணைய தளத்தில் அமைக்க பட்டிருக்கும். EMIS போன்று புதிய முயற்சி. பல வருடங்கள் கழித்து மாணவர்கள் தங்களது விவரங்களை கேட்டாலும் ஐந்து நிமிடங்களில் விவரங்களை எடுத்துக் கொடுக்கின்ற வகையில் இது ஒரு புதிய சாதனையை செய்துள்ளார்கள்.
இப்படி ஒரு புதிய முயற்சியை செய்த ஆசிரியர்களுக்கு பள்ளி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் மக்கள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளியின் இணையதள முகவரி :

No comments:
Post a Comment