*தொடரும் நல்லாசிரியர் பணி* கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த நாகமநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றும் ரஞ்சிதம் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு, ஆசிரியர் தினத்தன்று விருதும், பரிசுத்தொகை பத்தாயிரமும் வழங்கப்பட்டது.
பரிசு பெற்ற மறுநாளே அரசிடம் பெற்ற 10000 உடன், தனது சொந்தப்பணம் 10000 ஐ சேர்த்து ரூ இருபதாயிரம் மதிப்பிலான கணினி அச்சு இயந்திரத்தை தான் பணியாற்றும் பள்ளிக்கு நன்கொடையாக வழங்கி அசத்தியுள்ளார்.
இதுகுறித்து நல்லாசிரியர் விருது பெற்ற ரஞ்சிதத்திடம் கேட்டபொழுது இது மாணவர்களால் வந்த விருது, அது மாணவர்களுக்கே சேர வேண்டும் என நினைத்தேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பள்ளி மாணவி ஒருவர் கலந்துகொண்டு ஆசிரியைக்கு மாலை அணிவித்துப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
பள்ளித் தலைமை ஆசிரியர் புவனேஷ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரகு,பெற்றோர் அசிரியர் கழகத் தலைவர் துரைச்சாமி, சமூக ஆர்வலர் மோகன்ராஜ் எனப் பலரும் கலந்துகொண்டு சிறபித்தனர்.
No comments:
Post a Comment