ஆதார் கார்ட்லாம் ப்ரூஃப் கிடையாது..
உயர் நீதிமன்றம்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணமாக திகழ்கிறது. மொபைல் எண், வங்கிக் கணக்கு, பான் கார்டு, PF கணக்கு என பல விஷயங்களை ஆதார் கார்டுடன் இணைக்கும்படி பொதுமக்களிடம் அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆதார் என்பது 12 இலக்க அடையாள எண். ஆதார் கார்டை இந்திய மக்களுக்கு ஆதார் ஆணையம் வழங்கி வருகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் ஆதார் அட்டையை, வயதுக்கான ஆவணமாக எடுத்துக்கொள்ள முடியாது என பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆவண விவரங்கள் கேட்கப்படுவதில்லை என்பதால், வயதுக்கான சான்றாக (proof) எடுத்துக்கொள்ள முடியாது என பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய, மாநில அரசு சேவைகள், வங்கி சேவைகள் என பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கார்டு மிக அவசியமாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டை வயதுக்கான சான்றாக எடுத்துக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றமே தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment