குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: தொடங்கியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 11, 2021

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: தொடங்கியது

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி: தொடங்கியது 

குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “கரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தென் ஆப்பிரிக்கா தொடங்கியுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக ஆறு மாதம் முதல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 2,000 குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சீனாவின் சினோவாக் கரோனா தடுப்பூசியையே தென் ஆப்பிரிக்கா செலுத்தி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் 28 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 

 முன்னதாக, கியூபா, கனடா, அமெரிக்கா, ஐக்கிய அமீரகம், சீனா ஆகிய நாடுகளும் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசியைச் செலுத்தி வருகின்றன. டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

No comments:

Post a Comment