செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு
பஞ்சாப் மாநில அரசு இன்று அதிரடி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பு என்னவென்றால் பஞ்சாப் மாநிலத்தில் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடாத பஞ்சாப் அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அறிவிக்கப்படும் என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது.
மேலும் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொரோனா முதல் டோஸ் தடுப்பு ஊசி போடாமல் இருக்க கூடாது என பஞ்சாப் அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment