தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 7, 2021

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி!

தமிழக அரசு பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை – கல்வித்துறை அனுமதி! தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

     மாணவர் சேர்க்கை: நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் 

        வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. 

        ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment