1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது?.. அன்பில் மகேஷ் கூறிய தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, September 26, 2021

1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது?.. அன்பில் மகேஷ் கூறிய தகவல்

1 முதல் 8ஆம் வகுப்பு வரை.. பள்ளிகள் முழுமையாக திறப்பது எப்போது?.. அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் கூறிய தகவல் 

1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கான ஆலோசனைகள் பெற்றோரிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

 சென்னை தரமணியில் அமைந்துள்ள ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி என்னும் திட்டத்தில் மாணவர்கள் கோரிக்கைக்கான தொடக்க விழா நடைபெற்றது. ந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். 

இதில் அவர் பேசுகையில் மாணவர்களிடம் இருக்கும் அறிவியல் திறனை ஊக்குவிக்கும் வகையில் அறிவுத் திறன் ரீதியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.தொடக்கப் பள்ளிகளை திறப்பதற்கான பல்வேறு ஆலோசனைகள் பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்கப்பட்டு வருகிறது. 

இக்கருத்துக்களின் அடிப்படையில் முதல்வர் பள்ளிகளை திறப்பதற்கான நல்ல முடிவினை எடுப்பார் என்றார் அமைச்சர். இந்த நிகழ்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது கூறுகையில் சென்னை மாநகராட்சி பள்ளி சார்பில் ஆண்டுதோறும் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு சுவாமிநாதன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருகிறார்கள். இதுவரை இந்த நிறுவனத்தின் மூலம் 3000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 

 இந்த ஆராய்ச்சி நிறுவனம் மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களின் கருத்துகளின் அடிப்படையில் முதல்வரிடம் ஆலோசனை பெற்று பள்ளிகளை முழுமையாக திறப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அமைச்சர் மகேஷ்.

No comments:

Post a Comment