புதிய 100 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 23, 2015

புதிய 100 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது

திய 100 ரூபாய், 1 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. தற்போது 1 ரூபாய் நோட்டுடன் 1 ரூபாய் நாணயம் புழக்கத்தில் உள்ளது. 1 ரூபாய் நோட்டுகளை விட நாணயங்கள் தான் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன.ஆனால் வரிசைப்படுத்தி எண்ணுவதற்கு தேவையான ரூபாய் நோட்டுகளின் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து புதிதாக 1 ரூபாய் நோட்டுகளையும், 100 ரூபாய் நோட்டுகளையும் வெளியிட ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் புதிதாக வெளியிடப்படும் 1 ரூபாய் நோட்டுகளில் நிதித்துறை செயலாளர் ராஜீவ் மகரிஷியின் கையெழுத்துடன் ரூபாய் எம்பளம், சின்னம் இடம் பெற்று இருக்கும்.

இதே போல் 100 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்துடன் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனின் கையெழுத்து இடம் பெற்று இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment