இந்த ஆண்டுக்கான நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல், மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு 16-ஆம் தேதி தொடங்கி 30-ஆம் தேதி நிறைவுபெறுகிறது என்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தக் கலந்தாய்வு வேலூர் அண்ணா சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியருக்கான பணிநிரவல், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), பதவி உயர்வு கலந்தாய்வு, மாவட்டத்துக்குள் பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) 16-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு, இடைநிலை ஆசிரியருக்கான பணி நிரவல் கலந்தாய்வு 17-ஆம் தேதி நடைபெறுகிறது.
இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்), மாவட்டத்குள்ளான பொது மாறுதல் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
பட்டதாரி ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் (இணையதளம் வாயிலாக) 29-ஆம் தேதியும், இடைநிலை ஆசிரியருக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) 30-ஆம் தேதியும் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment