திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கான பணி நிரவலில் குறைவான விண்ணப்பதாரர்களே கலந்துகொண்டதால், புதன்கிழமை நடைபெற்ற கலந்தாய்வு போட்டியின்றி முடிவுற்றது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில், மாவட்டத்துக்குள்ளான இடமாறுதலுக்கு 5 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 3 மகளிர் மேல்நிலைப் பள்ளிகள் உள்பட மொத்தம் 11 பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களுக்கு 7 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 5 பேர் மட்டுமே கலந்துகொண்டு போட்டியின்றி பணி ஒதுக்கீடு பெற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை பொருத்தவரை, 21 இடங்கள் காலியாக இருந்தன. இந்தப் பிரிவில் 5 பேர் கலந்துகொண்டனர். ஆனால், 3 ஆசிரியர்கள் மட்டுமே பணியிடங்களைத் தேர்வு செய்தனர். 16 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் யாரும் பங்கேற்கவில்லை. இடைநிலை ஆசிரியர்க்கு காலியாக இருந்த 3 இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன. பணியிடங்களைத் தேர்வு செய்தவர்களுக்கு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ. சுபாஷினி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
No comments:
Post a Comment