ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: 21 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு: 21 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவு முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்

2015–16–ம் கல்வியாண்டில் அரசு, நகராட்சி மேல்நிலை பள்ளி மற்றும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கடந்த 12–ந் தேதி காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தொடங்கியது.
அரசு நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள 37 பேருக்கு அழைப்பாணை
அனுப்பப்பட்டு இருந்தது. 3 பேர் வரவில்லை. வேலூர் மாவட்டத்தில் காலிபணியிடங்கள் இல்லாததால் 13 பேர் தங்களுக்கு பதவி உயர்வு வேண்டாம் என்று தெரிவித்தனர். மீதமுள்ள 21 பேர் கலந்தாய்வில் கலந்து கொண்டனர்.
இந்த 21 பேருக்கு பதவி உயர்வுக்கான உத்தரவை முதன்மை கல்வி அலுவலர் பூபதி வழங்கினார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் மனோகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
பதவி உயர்வு பெற்றவர்கள் திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் பதவி உயர்வு இடமாறுதல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment