மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் சைனிக் பள்ளிகள் உள்ளிட்ட மத்திய அரசு பள்ளிகளில் தொடக்க மற்றும் உயர் நிலை வகுப்பு ஆசிரியர் பணியிடங்கள், மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.
அந்தவகையில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும்,
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 20–ந் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகிய 2 இடங்களில் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாக இன்று (புதன்கிழமை)மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
3 தாள்களுக்கு தேர்வு
இந்த தேர்வு 3 தாள்களை கொண்டது. இதன்படி மத்திய அரசு பள்ளிகளில் 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் தாள் 1–க்கான தேர்வில் மட்டும் பங்கேற்றால் போதும். 6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் தாள் 2 தேர்வில் பங்கேற்க வேண்டும்.
1–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஆசிரியராக பணியாற்ற விரும்புபவர்கள் 2 தாள்களுக்கும் எழுத வேண்டும். கல்வித்தகுதியை பொறுத்தவரை 5–ம் வகுப்பு வரை ஆசிரியர்களாக பணியாற்ற விரும்புப வர்கள் பிளஸ்–2 தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 2 ஆண்டு தொடக்கக்கல்வி பட்டய படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்
பொதுப்பிரிவினர் ஒரு தாளுக்கு மட்டும் தேர்வு எழுத ரூ.600–ம், 2 தாள்களுக்கும் தேர்வு எழுத ரூ.1000–ம் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஒரு தாள் பாடத்திற்கு தேர்வு எழுத ரூ.300–ம், 2 தாள்களை கொண்ட தேர்வுக்கு ரூ.500–ம் செலுத்தினால் போதும். அடுத்த மாதம் (செப்டம்பர்) 4–ந் தேதி நுழைவுச்சீட்டு வெளியிடப்படும். அதை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை மத்திய இடைநிலை கல்வி வாரியம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment