மருத்துவ முதலுதவி படிப்பு;செப்., 7க்குள் விண்ணப்பிக்கலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

மருத்துவ முதலுதவி படிப்பு;செப்., 7க்குள் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மர் மருத்துவக்கல்லுாரி நிர்வாக பிரிவு டீன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆபத்து காலங்களில் நோயாளிகளுக்கு செய்ய வேண்டிய முதலுதவி பற்றி அவசர கால மருத்துவ முதலுதவி நுட்பவியல் சான்றிதழ் படிப்பு ஜிப்மரில் நடத்தப்படுகிறது. ஒரு வருட கால இந்த சான்றிதழ் படிப்பில் 20 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதியாக பிளஸ் 2 வகுப்பில், அறிவியல் பாடம் படித்திருக்க வேண்டும்.
நர்சிங் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.பயிற்சி பெறும்போது,
ஒரு வருட காலத்திற்கு மாதந்தோறும் 300 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். படிப்பு காலம் முடிந்த பிறகு, ஜிப்மர் மருத்துவமனையில் பயிற்சி பெற விரும்பினால், மாணவர்களுக்கு மாதம் 3713 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட உள்ளது.
17 முதல் 25 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஜிப்மர் இணையதளம் www.jipmer.edu.in மற்றும் ஜிப்மர் கல்வி பிரிவு அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்., 7 ம் தேதிக்குள் ஜிப்மர் கல்வி பிரிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, வரும் செப்., 11ம் தேதி, காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரை நேர்காணல் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment