தேசிய கொடி செவ்வக வடிவில், நீள அகலம் 3:2 எனும் விகிதத்தில், மேலே காவி வண்ணம் நடுவே வெண்மை நிறம் கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீல நிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோக சக்கரம் இருக்க வேண்டும்.
தேசிய கொடி கம்பளி, கதர் மற்றும் பட்டு துணிகளால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும்
கொடியின் அளவு(milli metre): 6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100
தனியார் நிறுவனங்கள், தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.
பொது இடத்தில தேசிய கொடியை அவமதித்தல், கிழித்தல், எரித்தல், போன்றவை தண்டனைக்குரியவை.
எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய கொடியை அலங்கார பொருளாய் பயன் படுத்த கூடாது.
தேசிய கொடியை சட்டையாகவோ, கைகுட்டையாகவோ பயன்படுத்துதல் கூடாது.
சூரிய உதயத்துக்கு பிறகு தான் கொடி ஏற்ற பட வேண்டும், அதேபோல் மறைவதற்கு முன்பே இறக்கிவிட வேண்டும்.
அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற வேண்டும் .
பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய கொடி முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.
பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது நாடெங்கிலும், சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும், முதல்வர்கள், மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த மாநிலத்திலும் தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.
அரைக்கம்பத்தில் உள்ள தேசிய கொடியை இறக்கும்போது, முழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .
No comments:
Post a Comment