பாராளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடிவு: மத்திய மந்திரி தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 2, 2015

பாராளுமன்றத்தை முடக்கும் எம்.பி.க்கள் சம்பளத்தை பிடித்தம் செய்ய முடிவு: மத்திய மந்திரி தகவல்

லலித்மோடி விவகாரத்தால் பாராளுமன்றத்தை காங்கிரஸ் முடக்கி வருகிறது. லலித் மோடிக்கு உதவிய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்–மந்திரி வசுந்தரா ராஜே, வியாபம் ஊழலில் சிக்கிய மத்திய பிரதேச முதல்–மந்திரி சவுகான் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி பாராளுமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் எம்.பி.க்கள் பணி செய்யாவிட்டால் அவர்களுக்கு சம்பளம் இல்லை திட்டத்தை அமல் படுத்த பா.ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுலாத்துறை மந்திரி மகேஷ்சர்மா கூறியதாவது:–பாராளுமன்றத்துக்கு வராமல் இருக்கும் எம்.பி.க் கள் மற்றும் அவையை செயல்படாமல் இடையூறு செய்பவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் பாராளுமன்ற கூட்ட செலவு இழப்பீடு சரிசெய்ய இயலும்.வேலை செய்யாவிட்டால் எம்.பி.க்களுக்கு சம்பளம் கொடுக்க கூடாது என்று அரசுக்கு பல்வேறு தரப்பிலும் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனால் பாராளு மன்றத்தை முடக்கும் எம்.பி.க் களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.பாராளுமன்றத்தில் காங்கிரஸ் பலன் இல்லாத பிரச்சினைகள் கிளப்புகிறது. பாராளுமன்றம் என்பது முக்கிய பிரச்சினைகளை விவாதம் செய்யும் இடமாகும். அற்பமான விஷயத்துக்கு எல்லாம் பிரச்சினை செய்யக் கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment