இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, August 10, 2015

இனி ஆசிரியர்கள் சாக்பீஸ் பயன்படுத்த தேவையில்லை: வந்துவிட்டது மின்னணுத் திரை கற்பித்தல் முறை.

மாநிலத்திலே முதன்முறையாக மதுரை மருத்துவக் கல்லூரி வகுப்பறைகளில் மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டு, பேராசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்

          கரும்பலகை எழுத்துகள், வகுப்பின் கடைசி நாற்காலி மாணவர்க்கு தெரியாத நிலை என்று பல்வேறு இன்னல்கள் இருந்து வந்தன. தற்போது இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலே, மின்னணு எழுதும் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளன. வெள்ளை நிற மின்னணுப் பலகையுடன் கணினி, மின்னணு பேனாக்களை உள்ளன.
மின்னணுப் பேனாவால் 6 வண்ணத்தில் எழுதலாம். மின்னணுப் பலகையில் பாடங்களுக்கான உருவத்தை தத்ரூபமாக செயல்பாட்டுடன் கொண்டுவரலாம். மின்னணு பலகையில் எழுதப்படும் அனைத்துமே விடியோ, புகைப்படமாக பதிவாகிறது. ஆகவே எப்போது வேண்டுமானாலும் அதை மீண்டும் எடுத்துப் பார்க்கலாம்.
இதற்கான பயிற்சியை பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் பெற்றுள்ளனர். இதனால் பலவித இன்னல்கள் தவிர்க்கக்கூடும் என்று மருத்துவக் கல்லூரி டீன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment