சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பெற இனி பெற்றோர் சுய சான்றொப்பம் அளித்தாலே போதுமானது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்று முதல் ஆராய்ச்சி படிப்பு வரை தொழிற்கல்வி பயிலும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த, சீக்கிய, பார்சி மற்றும் ஜெயின் வகுப்பின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இதற்கான விண்ணப்பத்தில் வருவாய்த்துறை மூலம் அளிக்கப்படும் வருமான சான்றிதழ் மட்டும் இணைக்க வேண்டிய நிபந்தனை இருந்தது.
இதற்கு சம்பந்தப்பட்ட பகுதி விஏஓ, தாசில்தார் ஆகியோரை நாட வேண்டிய அவசியம் இருந்தது. தற்போது இந்த நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தி புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் மாணவ, மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரே இனி தங்களின் வருமானம் குறித்து சுயசான்று அளித்தால் போதும் என ஆணை பிறப்பித்துள்ளது. இதேபோல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கும் கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியலையும் சுயசான்றொப்பம் அளித்து சமர்ப்பித்தாலே போதும் என மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment