அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலபயிற்சி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 5, 2015

அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் ஆங்கிலபயிற்சி

அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பிரிட்டிஷ் கவுன்சில் மூலம், ஆங்கில பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக அரசு தொடக்க பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவதுடன், தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பள்ளிக்கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், 'அரசு பள்ளியில் ஆங்கில கல்வி சரியாகக் கிடைப்பதில்லை' என, பெரும்பாலான பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.இதையடுத்து, அரசு தொடக்கப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக, ஆங்கிலம் கற்றுத் தர தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதன் ஒரு கட்டமாக, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கில மொழிப்பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், பிரிட்டிஷ் கவுன்சிலுடன் இணைந்து, ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வரும், 17ம் தேதி முதல், பல கட்டங்களாக, வட்டார அளவில் இந்தப் பயிற்சி அளிக்கப்படும்.'சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் சென்று, ஆசிரியர்களுக்கு பாடம் நடத்த உள்ளனர்' என, தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment