கல்வி உதவித் தொகைக்கு வருவாய்த் துறை வருமானச் சான்று தேவையில்லை
சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித் தொகைக்கு வருவாய்த் துறையின் வருமானச் சான்று தேவை என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது என ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு 1-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் வழங்கப்படும் இந்த கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பவர்கள், வருவாய்த் துறையின் வருமானச் சான்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும் என ஏற்கெனவே நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது, அந்த விதி தளர்த்தம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் வழங்கியதைப் போல, மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் தனது வருமானம் குறித்து சுயசான்று அளித்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் போது, தமது முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியலை சுயசான்றொப்பமிட்டு அளித்தால் போதுமானது எனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment