நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 19, 2015

நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத்தரம் உயர்த்துவதால் உருவாகும்-உபரி இடைநிலை

ஆசிரியர் பணியிடங்கள்..
இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடத்தை கூடுதல் பணியிடமாக உருவாக்கி, இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவதால், ஆசிரியர் பணியிடங்கள்  உபரியாகின்றன.  அது மட்டுமின்றி, புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகுவதன் மூலமும், இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் உபரியாகின்றன.
ஒரு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்
போது, வகுப்பு 1-5 வரை தனியாகவும், வகுப்பு 6-10 வரை தனியாகவும் பிரிக்கப்படுகிறது.
வகுப்பு 1-5 ல் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில், ஒரு பணியிடம் ரத்து செய்யப்பட்டு , ஒரு தொடக்கப் பள்ளிதலைமை ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படுகிறது.  அந்த நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடம் ( புதிய பணியிடம் ) தரப்படுகிறது.
இடைநிலை ஆசிரியருக்கு பணியிடம்...?
எனவே 1 புதிய உயர்நிலைப் பள்ளி உருவாகினால், 1 இடைநிலை ஆசிரியர் பணியிடம் உபரியாகிறது. �� தமிழகத்தில் தற்போது 5771 உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.இப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளியில் இருந்து, படிப்படியாக உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டதன் மூலம் இதுவரை படிப்படியாக 5771 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தொடக்கக்
கல்வித்துறையில் உபரியாகி விட்டன. ��

*புதிய உயர்நிலைப் பள்ளியை உருவாக்கும் போது, வகுப்பு 1-5 ல் உள்ள ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை ரத்து செய்யாமல், தனியாக கூடுதல் பணியிடமாக, தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். 
எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

1 comment: